மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

போலியோவை போன்று கொரோனாவையும் விரட்டுவோம்: ஹர்ஷ் வர்தன்

போலியோவை போன்று கொரோனாவையும் விரட்டுவோம்: ஹர்ஷ் வர்தன்

போலியோவை விரட்டியது போல் கொரோனாவையும் இந்தியாவிலிருந்து விரட்டுவோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2ஆம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கிய நிலையில் மத்திய சுகாதார அமைச்சர்  ஹர்ஷ்வர்தன் தமிழகம் வந்துள்ளார். இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகையை ஆய்வு செய்தார்.

அதன்  பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. தற்போது 2300ஆக பரிசோதனை ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியா குறுகிய காலத்தில்  கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.  இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில்  உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.

இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து  தடுப்பூசி போடப்படும். அடுத்த சில நாட்களில் அனைத்து மக்களுக்கும் செலுத்தப்படும். இதற்காக லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு செயல்முறை தொடர்கிறது.

கொரோனா  மற்றும் தடுப்பூசி தொடர்பான விவரத்தைத் தேசிய மட்டத்திலிருந்து உள்ளூர் மட்டம் வரை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்துவதை உறுதி செய்துள்ளோம். கடந்த ஜனவரி 22ஆம் தேதி 125 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இன்று  3 மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

எனவே போலியோவை விரட்டியது போல் விரைவில் கொரோனாவையும் நாட்டை விட்டு விரட்டுவோம். வரும் ஜனவரி 17ஆம் தேதி முதல் போலியோ தடுப்பு மருந்து போடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டினார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 8 ஜன 2021