மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

இது ஆரம்பப் போராட்டம்தான்: டிரம்ப் ஆவேசம்

இது ஆரம்பப் போராட்டம்தான்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களை வைத்து வன்முறை செய்யத் தூண்டிய டொனால்டு டிரம்ப் மீது உலக அளவில் விமர்சனக் கணைகள் பாய்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டொனால்டு டிரம்பின் பதவிக் காலத்தின் மீதமுள்ள அதிகாரபூர்வ கணக்குகளைத் தடுக்கும் முடிவை ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை அவரது சமூகதளக் கணக்குகளை முடக்கின.

"இந்த காலகட்டத்தில் டிரம்ப்புக்குத் தொடர்ந்து எங்கள் சேவையைப் பயன்படுத்த அனுமதிப்பதன் அபாயங்கள் மிகப் பெரியவை என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வியாழக்கிழமை ஒரு பதிவில் தெரிவித்தார். தேர்தல் மோசடி குறித்து ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்புவதைத் தடுப்பதற்காக, டொனால்டு டிரம்பின் கணக்கை 24 மணிநேர காலத்திற்குத் தடுக்க நிறுவனம் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தது.

மேலும் பல சமூக ஊடகங்களும் டிரம்ப்பின் கணக்கை தற்காலிகமாக நீக்கத் தொடங்கியிருக்கின்றன. டொனால்டு டிரம்பின் யூடியூப் சேனலில் 2.68 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். அவருக்கு ட்விட்டரில் 88.7 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதேபோல், டிரம்பின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 35 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்

இதற்கிடையே ஜோ பிடனின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முறைப்படி அங்கீகரித்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், “தேர்தல் முடிவுகளில் நான் முற்றிலும் உடன்படவில்லை என்றாலும் ஜனவரி 20ஆம் தேதி ஒழுங்கான மாற்றம் ஏற்படும். சட்டபூர்வமான வாக்குகள் மட்டுமே எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அதே வேளையில், இது எங்கள் போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே" என்று டிரம்ப் கூறினார்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 8 ஜன 2021