மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி பாலக் கூட்டு

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி பாலக் கூட்டு

கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான புரொக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் புரொக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன. இந்த புரொக்கோலி பாலக் கூட்டு, அனைவருக்கும் ஏற்ற ஹெல்த்தி டிஷ் எனலாம்.

என்ன தேவை?

பாசிப்பருப்பு - அரை கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 2 கப்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

புரொக்கோலி - ஒரு கப்

மல்லித்தழை - அலங்கரிக்க‌

உப்பு - தேவையான அளவு

அரைக்க

துருவிய தேங்காய் - கால் கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

தாளிக்க

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1 (பாதியாக உடைக்கவும்)

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைக்கவும். பாசிப்பருப்பைக் கழுவி வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கடாயில் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூளுடன் சேர்த்து வேக விடவும். பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் வெங்காயம், தக்காளி, புரோக்கோலி, பாலக்கீரை, அரைத்த தேங்காய்க் கலவை சேர்த்துக் கலக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். வெந்தததும் எடுத்துத் தனியாக வைத்து விட்டு, அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து, மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: புரொக்கோலி பருப்பு ரசம்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 8 ஜன 2021