மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

கடைசி மைல் வரை கொரோனா தடுப்பூசி விநியோகம்: ஹர்ஷ்வர்தன்

கடைசி மைல் வரை கொரோனா தடுப்பூசி விநியோகம்: ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி (1,00,16,859), 96.36 சதவீதமாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயத்தில் இந்திய மக்களுக்கு ஆறுதல் செய்தியாக விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதனிடையே நாடு முழுவதும் இந்த தடுப்பூசிகளைக் கொண்டு ஒத்திகை நடத்தியது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

இந்நிலையில் நாளை மற்றொரு ஒத்திகை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ‘அனைத்து மாநிலங்களிலும், உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகிக்கும் திறன் மற்றும் மேலாண்மையை உறுதி செய்வதற்காக ஜனவரி 8 ஆம் தேதி ஒத்திகை நடைபெறும்.

மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் என கொரோனா தடுப்பூசி அறிமுகத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாளை நடைபெறும் ஒத்திகை அறிய வைக்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடக்கூடாது, கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கைதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ”கொரோனா தடுப்பூசி தடையில்லாமல் கடைசி மைல் வரை விநியோகத்தை உறுதி செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம். தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களிடமும் தெரிவித்ததாகவும், ஏற்கனவே 4 மாநிலங்களில் நடைபெற்ற ஒத்திகை மதிப்பாய்வின் பின்னூட்டத்தின் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்துள்ளோம். அதனடிப்படையில் நாளை 33 மாநிலங்களில் ஒத்திகை நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு முன்னதாக கோவாக்சின் பயன்பாட்டுக்கு வருவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவுபெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 3ஆம் கட்ட பரிசோதனையில் 25800 தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 7 ஜன 2021