மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

15, 16ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கொலை வழக்குகள்: நீதிபதி கேள்வி!

15, 16ஆண்டுகளாக நிலுவையிலுள்ள கொலை வழக்குகள்: நீதிபதி கேள்வி!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை பெற்று வரும் துரைராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜனிடம்,. "சென்னை நகரில் என்ன நடக்கிறது?. கொலை வழக்குகள் 15, 16ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இத்தனை ஆண்டுகளாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடும் நிலையில் இத்தனை ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையிலிருந்தால் யார் சாட்சி சொல்ல வருவார்கள்? எப்படி தண்டனை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எத்தனை? இதுதொடர்பாக வரும் ஜனவரி 25ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 7 ஜன 2021