மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

மூன்றாவது டெஸ்ட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்!

மூன்றாவது டெஸ்ட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து ஒரு விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜனவரி 7) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியினர் பந்து வீச்சைத் தொடங்கினர்.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் வார்னர் மற்றும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்கினர். வார்னர் ஐந்து ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து ஒரு விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 48,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில் தினமும் 10,000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 7 ஜன 2021