மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரொக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து புரொக்கோலியை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். இப்போதுள்ள மந்தமான சூழ்நிலையில் சூடான புரொக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு பலனடையலாம். புத்துணர்ச்சி பெறலாம்.

என்ன தேவை?

பஜ்ஜி மிளகாய் - 5

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

புரொக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங் செய்ய

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)

புரொக்கோலி - அரை கப் (பூக்களாகப் பிரித்துக் கொள்ளவும்)

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பஜ்ஜி மிளகாயைக் கழுவி ஈரம் போக துடைத்து, தனியே வைக்கவும். ஸ்டஃபிங் செய்வதற்குத் கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும். தேவையானவை பட்டியலில் உள்ள மற்ற பொருட்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை சிறிது சிறிதாகக் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவாகக் கரைத்து வைக்கவும்.

ஒரு பஜ்ஜி மிளகாயை எடுத்து நடுவில் நீளமாகக் கீறி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு, புரொக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கை நிரப்பி வைக்கவும். இப்படி அனைத்து மிளகாயின் உள்ளேயும் ஸ்டஃபிங்கை நிரப்பவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் தீயை மிதமாக்கவும். ஸ்டஃப் செய்த மிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து, மெதுவாக எண்ணெயில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் மறுபுறத்தை வேக \வைத்து எடுத்து, ஆறியதும் ‘கெட்சப்’ அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 6 ஜன 2021