மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஜன 2021

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மது பிரியர்கள் அதிர்ச்சி!

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மது பிரியர்கள் அதிர்ச்சி!

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் என இம்மாதம் மூன்று நாட்களுக்கு மதுக் கடைகள் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வருவாயில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்குக் கூடுதலாக விற்பனையாகும்.

2021 புத்தாண்டை முன்னிட்டு, டிசம்பர் 31ஆம் தேதி 159 கோடி ரூபாய்க்கும், ஜனவரி 1ஆம் தேதி 138.80 கோடி ரூபாய்க்கும் என இரண்டு நாட்களில் ரூ.297 கோடிக்கும் அதிகமாக மது வகைகள் விற்பனையாகியுள்ளன. எனினும் இது கடந்த ஆண்டைவிட ரூ.17.6 கோடி குறைவு எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்த இரு நாட்களில் ரூ.315 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

இந்த சூழலில், இம்மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட இருக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அதன் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் ரூ.2500 டாஸ்மாக் கடைகள் மூலம் வசூலிக்கப்பட்டுவிடும் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இம்மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 5 ஜன 2021