மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

சோழாவைத் தொடர்ந்து லீலா: கொரோனா ஹாட் ஸ்பாட் ஆகும் நட்சத்திர ஹோட்டல்கள்!

சோழாவைத் தொடர்ந்து லீலா: கொரோனா ஹாட் ஸ்பாட் ஆகும் நட்சத்திர ஹோட்டல்கள்!

கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டினாலும், அண்மை நாட்களாக சென்னையில் உயர் தர நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னை கிண்டியில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா தாக்கி, அது கொரோனா ஹாட் ஸ்பாட் என செய்திகள் வந்த நிலையில்... அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னையின் நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் இருபது ஊழியர்களுக்கு கொரோனா பாசிடிவ் இன்று (ஜனவரி 4) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக, லீலா பேலஸில் நடத்தத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்யவோ, ஒத்தி வைக்கவோ ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்

அதிகாரிகள் வட்டாரத் தகவல்களின்படி, அண்மை நாட்களாக விமான நிலையங்களை அடுத்து சென்னை முழுதும் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 4,192 ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து 114 பேர் உட்பட மொத்தம் 125 ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.

கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு ஒரு காலத்தில் கொரோனா தொற்று பரவியதைப் போல இப்போது நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உயர் தர ஹோட்டல்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் ஆக மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்த லீலா பேலஸ் ஹோட்டலில்தான் ரஜினி தனது மாற்று அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அண்மையில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த ஹோட்டலில்தான் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

-வேந்தன்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 4 ஜன 2021