மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

ஒப்பந்த விவசாய திட்டமே இல்லை : ரிலையன்ஸ்

ஒப்பந்த விவசாய திட்டமே இல்லை : ரிலையன்ஸ்

விவசாயிகள் போராட்டத்தில் ஜியோ டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எந்த திட்டமும் இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 40ஆவது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனிடையே புதிய சட்டங்கள் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமே அதிகம் பயனடையும் என்றும் தகவல்கள் பரவின. இந்த சூழலில் பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் உள்ள ஜியோ டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 1500 டவர்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் விருப்பத்திற்கு ரிலையன்ஸ் முழுமையாக ஆதரவு தரும். தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ ஒப்பந்த விவசாயத்தில் நுழையும் எந்த திட்டமும் நிறுவனத்திடம் இல்லை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மூலம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜியோ டவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

”கார்ப்பரேட்" அல்லது "ஒப்பந்த" வேளாண்மையின் நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அல்லது எங்கள் துணை நிறுவனங்கள் எந்தவொரு விவசாய நிலத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாங்கவில்லை. அதுபோன்ற திட்டமும் எங்களிடம் இல்லை.

பஞ்சாபில் மட்டும் ஜியோவுக்குச் சொந்தமான 9,000 டவர்களில் 1,500 டவர்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலங்களில் பல இடங்களில் சேவை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னணியில், சில வர்த்தகப் போட்டி நிறுவனங்களும் இருப்பதாகக் கருதுகிறோம். இதுபோன்ற வன்முறைகளால் எங்கள் ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி விலையை விடக் குறைவாக வாங்கும் செயலை ஒருபோதும் செய்யமாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 4 ஜன 2021