மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

கோவாக்சின்: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி!

கோவாக்சின்: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து, 2ஆவது தடுப்பூசியாக கோவாக்சினுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி வழங்கியது. ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்தது.

இதன் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்தன. இதில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களும் உட்படுத்தப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இதனிடையே அவசர பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியைக் கொண்டு வர விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது பாரத் பயோடெக் நிறுவனம். இதில் நாடு முழுவதும் ஏறத்தாழ 25,000 தன்னார்வலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது.

புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுக்கு அனுமதியளித்தது குறித்து மருந்­துத் தரக்­கட்­டுப்­பாட்டு ஆணை­யர் விஜி சோமானி, “இந்த கொரோனா தடுப்பூசிகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுவது தவறான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் நிலையில், கோவாக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆல் இந்தியா டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க்' (ஏ.ஐ.டி.ஏ.என்) என்ற சுகாதார கண்காணிப்பு அமைப்பு, “கோவாக்சின் குறித்த தரவுகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும் இதுபோன்று வெளிப்படைத் தன்மை இல்லாதது பல கேள்விகளை எழுப்பும். இந்தியாவில் அறிவியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் அமைப்புகளின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும், முறையாக ஆராய்ச்சி செய்யாத தடுப்பூசியை எந்த அறிவியல் அடிப்படையில் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். கோவாக்சின் புதிய திரிபுக்கு எதிராகச் செயல்படும் என்கிற கருத்தை ஆதரிக்கும் தரவுகள் எதுவும் சோதனை முடிவுகளில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

காங்கிரசின் மூத்த தலைவர் சசி தரூர், “3 ஆம் கட்ட பரிசோதனை நிறைவடையாத நிலையில், முன் கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது. பரிசோதனை முடியும் வரை இந்த தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், " இதுபோன்ற முக்கிய பிரச்சினையை அரசியலாக்குவதை ஏற்க முடியாது. சசி தரூர், அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர், கொரோனா மருந்தை அங்கீகரிப்பதற்காகப் பின்பற்றப்பட்ட அறிவியல் ஆதரவு நெறிமுறைகளை இழிவுபடுத்த முயலாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச்சூழலில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சினை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

திங்கள் 4 ஜன 2021