மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி உருளைக்கிழங்கு வறுவல்!

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி உருளைக்கிழங்கு வறுவல்!

முட்டைகோஸும் காளானும் கலந்து செய்த மாதிரி ஒரு வடிவம்... பளிச்சிடும் பச்சை நிறம்... அது புரொக்கோலி. மார்க்கெட்டிலும், கடைகளில் இதைப் பார்த்திருந்தாலும், நம்மில் பலர் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து வந்திருப்போம். புரொக்கோலி, அதன் அழகான நிறம் வடிவத்தைப் போலவே பல அற்புதமான மருத்துவக் குணங்களையும் கொண்டது. குறிப்பாக பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரொக்கோலி கர்ப்பிணிகளுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.

என்ன தேவை?

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 3 (நீளமாக நறுக்கவும்)

மீடியம் சைஸ் புரொக்கோலி - 1 (சற்று நீளமான பூக்களாக‌ நறுக்கிக்கொள்ளவும்)

பெரிய வெங்காயம் - 1 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

நசுக்கிய பூண்டுப் பல் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, கடலைப்பருப்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை மிதமாக்கி மூடி போட்டு மூன்று நிமிடம் நன்கு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்ததும், அதில் புரொக்கோலியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு கிரிஸ்பியாகும் வரை வதக்கி இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு

புரொக்கோலி சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 4 ஜன 2021