மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

பெண் ஊழியருக்கு மீண்டும் பணி: டிசிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

பெண் ஊழியருக்கு மீண்டும் பணி: டிசிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கத் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரியைச் சேர்ந்த லதா கோவிந்தசாமி என்பவர் 1995ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய நிலையில் லதா தனது பதவிக்குத் தேவையான தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள வில்லை என கூறி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அவருக்கு பணி ஒதுக்காமலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் 2017 மே 2ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு எடுத்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தும் அவற்றை ஏற்காமல் லதாவை பணிநீக்கம் செய்து நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் நிறுவனத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் அமர்த்த டிசிஎஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரியும், பணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு 18 சதவீத வட்டியுடன் ஊதியத்தை வழங்க கோரியும் சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி என்.வேங்கட வரதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்க்கும்போது அவர் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, பணிநீக்க உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து ஊதிய பாக்கியில் 50 சதவிகிதத்தை வழங்க வேண்டும் என்றும் லதாவை மீண்டும் மூன்று மாதத்தில் பணியில் சேர்க்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 3 ஜன 2021