மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: இனிப்பு அவல்

ரிலாக்ஸ் டைம்: இனிப்பு அவல்

“உலகில் மனித இனம் மட்டுமே, உணவைச் சமைத்து, சிதைத்து, பசி வரும் முன்பே வயிறு வெடிக்கும் அளவுக்கு சாப்பிடும் இனம். அதனால் மனிதர்கள் இலகுவில் நோய்வாய்ப்பட்டு, எதிர்ப்புச்சக்தி குறைந்து, பிணிகளால் அவதிப்படுகின்றனர்” என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள். அதேநேரம், “சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?” என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு “சரிப்பட்டு வரும்” என்று பதில் அளிக்கிறது இந்த இனிப்பு அவல்.

எப்படிச் செய்வது?

கால் கிலோ கல் நீக்கி நன்றாகச் சுத்தம் செய்த தட்டை அவல் அல்லது கெட்டி அவலைத் தண்ணீரில் ஒரு அலசு அலசி, வடிகட்டிக்கொள்ளவும். இதைக் குறைந்த நீரில் 5 - 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அவலை நன்றாக அழுத்திப் பார்த்தால், வெந்த அரிசி (சோறு) பதத்துக்கு வந்திருக்க வேண்டும். இதனுடன் இரண்டு கப் தேங்காய்த்துருவல், கால் கிலோ வெல்லத்தூள் (ஊறுவதற்கு முன்பு இனிப்புப் போடக்கூடாது. இதன் சுவை மற்றும் தன்மை மாறிவிடும்), சிறிதளவு ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை ஐந்து நிமிடங்கள் கழித்துச் சாப்பிடலாம்.

குறிப்பு

இது நல்ல சுவையான, சத்தான உணவு. சுவை கூட்டுவதற்கு வறுக்காத முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சை சேர்க்கலாம். அரிசி அவலுக்குப் பதில், கேழ்வரகு அவல், சோள அவல், கம்பு அவல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

சிறப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 3 ஜன 2021