மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

சௌரவ் கங்குலிக்கு என்ன ஆச்சு?

சௌரவ் கங்குலிக்கு என்ன ஆச்சு?

சௌரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக இன்று (ஜனவரி 2) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், பிசிசிஐயின் தற்போதைய தலைவருமான கங்குலிக்கு இன்று காலை லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தின் பெலாகாவில் உள்ள தனது இல்லத்தில் ஜிம் பயிற்சி மேற்கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து 11 மணியளவில் வுட்லாண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

முதலில் எமெர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அம்மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், லேசான மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதயநோய் நிபுணர் சரோஜ் மண்டல் தலைமையில் 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் கங்குலிக்கு பிரதான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். அவர் விரைவாக, முழுமையாகக் குணமடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில், “ பிசிசிஐ தலைவர் கங்குலி விரைவாகக் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்தாருடன் பேசினேன். தாதா உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 2 ஜன 2021