மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

வரலாற்றிலேயே முதன்முறை.... புத்தாண்டில் களையிழந்து காட்சியளித்த மெரினா!

வரலாற்றிலேயே முதன்முறை.... புத்தாண்டில் களையிழந்து காட்சியளித்த மெரினா!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கு மெரினாவில் அனுமதியளிக்கப்படாத நிலையில், களையிழந்து காட்சி அளித்தது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் மெரினாவில் லட்சக் கணக்கான மக்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பலரும் ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். கடற்கரையே மக்கள் கடலாய் காட்சி அளிக்கும். கேக் வெட்டி ஆட்டம் பாட்டம், வானவேடிக்கை, செல்போன் வெளிச்சங்கள் என ஆரவாரத்துடன் புத்தாண்டைச் சென்னை மக்கள் வரவேற்பார்கள். பிற ஊர்களிலிருந்து சென்றும் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தமிழக அரசு தடை விதித்தது குறிப்பாக, சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று பிற்பகல் முதலே சென்னை போலீசார் மெரினாவுக்குச் செல்லும் சாலைகளை மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். காமராஜர் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரலாற்றிலேயே முதன் முறையாகப் புத்தாண்டு இரவில் மக்கள் இல்லாமல் மெரினா கடற்கரை வெறிச்சோடி காட்சியளித்தது. மெரினா கடற்கரை மட்டுமின்றி பெசண்ட் நகர், ஈசிஆர் கடற்கரைகளிலும் வழக்கமாக டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் கொண்டாட்டங்கள் இல்லை. புதுச்சேரி நோக்கிச் சென்ற இளைஞர்களையும் திருப்பி அனுப்பி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமின்றி போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகளால், சென்னை மக்களுக்கு இந்த புத்தாண்டு ஆரவாரமின்றி ஒரு அமைதியான புத்தாண்டு தினமாக அமைந்தது. தேனாம்பேட்டை பகுதிகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு கொண்டாடினர். அதுபோன்று பாண்டி பஜார் மற்றும் சென்னையின் முக்கிய பாலங்கள் வண்ண விளக்குகளால் மாநகராட்சி அதிகாரிகளால் அலங்கரிப்பட்டிருந்தன.

சென்னையில் புத்தாண்டு தினத்தையொட்டி 300 சோதனை சாவடிகள் அமைத்து, 10000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 1 ஜன 2021