மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: மாணவியின் தந்தை கைது!

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: மாணவியின் தந்தை கைது!

நீட் மதிப்பெண் சான்றிதழைப் போலியாகச் சமர்ப்பித்த மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்தல் என முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்த மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீக்‌ஷா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக கூறி கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் சந்தேகமடைந்து விசாரித்ததில், தீக்‌ஷா 720க்கு வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில், மருத்துவ கல்வி இயக்குநரக கூடுதல் ஜெனரல் செல்வராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்‌ஷாவின் தந்தை பாலச்சந்திரன் போலி மதிப்பெண் சான்றிதழ் பெற உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு அவரை 2 முறை அழைத்தும் ஆஜராகவில்லை என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தலைமறைவாக இருக்கும் மாணவி மற்றும் அவரது தந்தை மீது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், மாணவியின் தந்தை பாலச்சந்திரன் பெங்களூருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், பாலச்சந்திரனைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் போலி சான்றிதழ் எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து அவரை ஜனவரி 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கேட்டு பாலச்சந்திரன் மனு கொடுத்திருக்கிறார். அவரது மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 1 ஜன 2021