மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

புதுமுகம் 2020 : வருடத்தின் சிறந்த அறிமுக நடிகர்கள்!

புதுமுகம் 2020 : வருடத்தின் சிறந்த அறிமுக நடிகர்கள்!

ஒவ்வொரு வருடமும் புதுப்புது நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிலரே தனித்து தெரிகிறார்கள். புதுமுக நடிகர்களை வரவேற்பது அவசியம். ஏனெனில், அபூர்வராகம் படத்தில் ரஜினி நடிக்கும் போது புதுமுக நடிகரே. விஜய்க்கு நாளைய தீர்ப்பும், அஜித்துக்கு அமராவதியும் அப்படியான படங்களே. இந்தப் புதுமுகங்களே பிற்காலத்தில் தமிழ்சினிமாவின் முகங்களாக மாறினார்கள். ஆக, கடந்த 2020ஆம் ஆண்டில் அதிக கவனம் ஈர்த்த புதுமுகங்கள் குறித்த தொகுப்பு தான் இது.

ராஜ்குமார் பிச்சுமணி

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் சைக்கோ. பெண்களைக் கடத்திச் சென்று தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனைக் கொண்டு அன்பை சொல்ல எத்தனித்திருக்கும் படம் மிஷ்கினின் சைக்கோ திரைப்படம். பொதுவாக, மிஷ்கின் படங்களின் வில்லன்களுக்கு ஒரு தனித்துவ கேரக்டர் இருக்கும். வழக்கமான வில்லனாக இருக்காமல், கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருப்பார். அப்படி, சைக்கோவில் நெகட்டிவ் ரோலில் நடித்தவர் ராஜ்குமார் பிச்சுமணி. மிஷ்கினிடம் உதவியாளராக இருந்து, நடிகராக மாறியவர். க்ளீன் ஷேவ், நீட் ட்ரெஸ் என வரும் பிச்சுமணி, செய்யும் வில்லத்தனம் வேற லெவல்.

பவானி ஸ்ரீ

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து மற்றுமொரு திறமையாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ. இவர், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கணவர் பெயர் ரணசிங்கம் படத்தில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானார். விஜய்சேதுபதியின் தங்கை மாயவேணி கேரக்டரில் வருவார். இவருக்கு முதல் படமே, அனைவரின் கவனத்தை ஈர்த்த படமாகிவிட்டது.

ரக்‌ஷன்

சின்னத்திரையில் தொகுப்பாளராக மக்கள் மனம் கவர்ந்த ரக்‌ஷனின் அடுத்த ஸ்டெப் பெரிய திரையில் நடிகர். துல்கர் சல்மான் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்தில் துல்கரின் நண்பராக, இரண்டாவது ஹீரோவாக படம் முழுவதும் வருவார் ரக்‌ஷன். முதல் படம் போல இல்லாமல், மிக இயல்பாக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார். காமெடி, எமோஷனல் நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருப்பார். 2020ன் சிறந்த அறிமுகமென்றால் அது ரக்‌ஷன் தான்.

நடாஷா சிங்

சமூக அக்கறையுடன் படங்களைக் கொடுக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரே. அப்படியான ஒரு இயக்குநர் ராஜூமுருகன். இவரின் குக்கூ, ஜோக்கர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அப்படி, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் நாயகியாக வந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் நடாஷா சிங். மும்பையைச் சேர்ந்த இவர், பாலிவுட்டில் நிறைய படங்களில் வந்திருக்கிறார். தமிழில் கச்சிதமான ஒரு அறிமுகம்.

நிரஞ்சனி அகத்தியன்

பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் நடிகராக வருவது இயல்பு. ஜி.வி.யின் தங்கையைப் போல, இயக்குநர் அகத்தியனின் மகளும், நடிகை விஜயலட்சுமியின் தங்கையுமான நிரஞ்சனி அகத்தியனும் இந்த வருடத்தில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நிரஞ்சனி. இப்படம், எதிர்பாராத பெரிய சர்ப்ரைஸ் ஹிட்டாக இருந்தது. அதில் இவரும் இடம்பெற்றிருப்பது ஹைலைட்!

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 1 ஜன 2021