மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரம் என நான்கு மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிறைவடைந்த நிலையில் நாளை அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழலில் தமிழகத்தில் 11 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பும் பாதிப்பும் பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி எழுந்த நிலையில் நாளை நாடு முழுவதும் இதற்கான ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனிடையே அவசர மருத்துவ பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக், பிஃபைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் குழு இன்று ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இறுதி ஒப்புதலுக்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த சூழலில் தமிழகத்தில் 11 இடங்களில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதான புரம் சுகாதார நிலையங்கள் என 11 இடங்களில் ஒத்திகைக்காக முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 1 ஜன 2021