மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

நிமிடத்துக்கு 4100 ஆர்டர்கள்: திணறிய சொமேட்டோ!

நிமிடத்துக்கு 4100 ஆர்டர்கள்: திணறிய சொமேட்டோ!

புத்தாண்டை முன்னிட்டு நிமிடத்துக்கு 4100 ஆர்டர்கள் குவிந்ததாக சொமேட்டோ சிஇஓ தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பொதுமக்களிடையே ஆன்லைன் ஆர்டர் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு உலகில் பல நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக குடும்பத்தோடும், நண்பர்களோடும் வெளியில் சென்று கொண்டாட முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர். வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் புத்தாண்டு இரவு அமைதியாகக் கழிந்தது.

ஆனால் ஆன்லைன் உணவு விற்பனை செயலியான சொமேட்டோ நேற்று பரபரப்பாக இயங்கியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, பலரும் சொமேட்டோவை பயன்படுத்தி, பிரியாணி, சாலட், ஐஸ் கிரீம் என தங்களுக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

இதுகுறித்து சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் வாழ்நாளில் இதுதான் எங்களுக்குக் குவிந்த அதிகபட்ச ஆர்டர்களாகும். மாலை 6 மணிக்கு நிமிடத்துக்கு 2,500 ஆர்டர்களாக வந்து கொண்டிருந்தது, அதைத்தொடர்ந்து 45 நிமிடத்தில் 3,500ஆக அதிகரித்தது, தொடர்ந்து 8 மணியளவில் நிமிடத்துக்கு 4100 ஆர்டர்கள் வந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள தங்களது அன்புக்குரியவர்களுக்காக வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்ததாக தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.

இதில் அதிகமானோர் பிரியாணி, பீட்சா, சீஸ் பீட்சா ஆகியவற்றை ஆர்டர் செய்திருக்கின்றனர். ஒரே நிமிடத்தில் இவ்வளவு ஆர்டர்கள் வந்ததால் சொமேட்டோ ஊழியர்கள் உணவை விநியோகம் செய்வதிலும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 1 ஜன 2021