மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக்

கிச்சன் கீர்த்தனா: எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக்

ஹேப்பி நியூ இயர். கடந்தகால கசப்புகளை மறந்து, இனிப்போடும் இனிமையோடும் இந்த ஆண்டை வரவேற்போம். அதற்கான சின்ன தொடக்கமாக உங்கள் வீட்டிலேயே செய்து அசத்த சூப்பரான இந்த எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக் உதவும்.

என்ன தேவை?

மைதா மாவு - ஒரு கப்

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் - அரை கப்

பால் - முக்கால் கப்

வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்

ரெட் ஃபுட் கலர் - 2-3 துளிகள்

விப்பிங் க்ரீம் - ஒரு கப் (ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்)

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலிக்கவும். வெண்ணெயோடு பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் பதம் வரும்வரை நன்கு அடிக்கவும். க்ரீம் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். ஓவனை ப்ரீஹீட் செய்யவும். கேக் கலவையை வெண்ணெய் தடவிய டிரேயில் கொட்டி, 15 நிமிடங்களுக்கு 180 டிகிரியில் பேக் செய்யவும். இதற்கிடையில் விப்பிங் க்ரீமை நன்கு அடித்துத் தயாராக வைத்துக்கொள்ளவும். கேக் பேக் ஆனதும் அதை ஸ்லைஸ் செய்து, விப்பிங் க்ரீம் தடவி, மேலே பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும்.

ஓவன் இல்லாதவர்கள் சாதாரண அடுப்பிலும் செய்யலாம். அகலமான பாத்திரத்தினுள் ஸ்டாண்டு வைத்து அந்தப் பாத்திரத்தை சூடு செய்யவும்.பிறகு அதன் மேல் கேக் மாவு நிரப்பிய பாத்திரத்தை வைத்து மூடி, குறைந்த தணலில் 40-45 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கலாம்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 1 ஜன 2021