தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி சார்பில் 45ஆவது சென்னை புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம்தேதி தொடங்குகிறது. இந்தப் புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்ட 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகக்காட்சியில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தமிழ் எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் பேர் புத்தகக்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை 18 நாட்கள் புத்தகக்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,