மழைநீரில் மிதக்கும் சென்னை:

public

புரெவி புயல் காரணமாகத் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் அதற்கு மாறாகச் சென்னையில் கன மழை பெய்து வருகிறது. காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, திருவான்மியூர், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள நேதாஜி போஸ் சாலையில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அப்பகுதியில் வடிகால் அடைப்புகளைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மந்தைவெளி பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாந்தோம் சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்,

மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) எல்.நந்தகுமார் மற்ற அதிகாரிகளுடன் வேளச்சேரி ராம் நகர், ஏஜிஎஸ் காலனி, கல்கி நகர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து இந்த பகுதிகளில் நீர் வெளியேறுவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பல பகுதிகளிலும் கொட்டித் தீர்க்கும் மழையையும், தேங்கியுள்ள நீரையும் சென்னைவாசிகள் வீடியோ எடுத்து ட்விட்டரில் #chennairain என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilNadu | Waterlogging at Bazullah Road in Chennai’s T Nagar following heavy rainfall.#ChennaiRain #Chennai #RainFall #chennaifloods pic.twitter.com/4hlmG2p9Ld

— First India (@thefirstindia) December 4, 2020

சென்னை கோயம்பேடு சந்தையில் கனமழை பொழிந்ததாக ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

புறநகர்ப் பகுதிகளில் ஜி.எஸ்.டி சாலை, கத்திப்பாரா, தென் பகுதியில் மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்த சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலின் போது முதலில் 1000 கன அடி தொடங்கி 9000 கன அடி வரை செம்பரம்பாக்கத்திலிருந்து நீர் திறக்கப்பட்டதால், அடையாற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பின்னர், கடந்த 26ஆம் தேதி 560 கனஅடி, 28ஆம் தேதி 360 கன அடி, 29ஆம் தேதி 150 கன அடி என படிப்படியாகக் குறைக்கப்பட்டன. டிசம்பர் 2ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் புரெவி புயலின் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், நேற்று காலை வரை 3000 கன நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று ஏரிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் 22.45/24 அடியாக உயர்ந்தது.

இதனால், சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட பொறியாளர்கள் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். ஏரிக்கு 10ஆயிரம் கன அடி வரை நீர் வரக்கூடும் என கூறப்படுகிறது.

எனவே இன்று மதியம் முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *