மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 நவ 2020

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: சிபிஐ!

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: சிபிஐ!

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, ஆளுநர் கையில்தான் முடிவு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்து வருவதால் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்பாக தனது மகனை விடுவிக்க வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டரீதியாக போராடி வருகிறார்.  7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இவ்விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீதான தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதேபோன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து பன்னோக்கு விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் அந்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலோபர் நிஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தது போல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு நவம்பர் 23ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் கையில்தான் இருக்கிறது. இவ்விவகாரத்தில் சிபிஐக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த பங்கும் இல்லை. பெல்ட் வெடிகுண்டு விவகாரம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட எங்களின் இறுதி அறிக்கையை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை.  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 22 நவ 2020