மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

பொய்யான பாலியல் வழக்கு: ஆணுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு!

பொய்யான பாலியல் வழக்கு: ஆணுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவு!

பொய்யான பாலியல் புகார் அளித்ததால் பாதிக்கப்பட்ட ஆணுக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பெண் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு எடுத்திருந்த நிலையில் நிலப் பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து சந்தோஷ் குடும்பம் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தது. அப்போது, தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பிடெக் படித்துக்கொண்டிருந்தார் சந்தோஷ்.

இந்நிலையில், தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகக் கூறி ஏற்கனவே திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சந்தோஷ் 95 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே சந்தோஷ் மீது புகார் அளித்த அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டதில், பெண்ணை சந்தோஷ் வன்கொடுமை செய்யவில்லை என்று உறுதியானதால் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

எனவே தன் மீது பொய் புகார் அளித்து சிறையில் அடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் பொய் புகாரின் பேரில் நான் சிறை சென்றதால், படிப்பைத் தொடர முடியாமல், தற்போது பொறியாளராக இருக்க வேண்டிய நான் அலுவலக உதவியாளராக பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

இந்த வழக்கு செலவிற்காக 2 லட்சம் ரூபாய் வரை வழக்கறிஞருக்குச் செலவழித்துள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கின் காரணமாக ஓட்டுநர் உரிமம் கூட மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொய்யான பாலியல் புகார் கொடுத்து இளைஞரின் எதிர்காலத்தைப் பாழாக்கியதால், அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொய் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

-பிரியா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

சனி 21 நவ 2020