சமூக வலைதளங்களில் வெறுப்பு உணர்வு பதிவுகள்!

ஒவ்வொரு 10000 பதிவுகளிலும், வெறுப்பு உணர்வை விதைக்கும் 10 பதிவுகள் இருக்கின்றன.
கடந்த ஜூலை முதல் செப்டெம்பர் வரை, 22.1 லட்சம் பதிவுகளை நீக்கி இருக்கின்றோம் என முகநூல் அறிவிப்பு.
அதே காலகட்டத்தில், இன்ஸ்டாகிராமில் 6.5 இலட்சம் பதிவுகள் நீக்கப்பட்டன.
2020 ஜனவரி முதல் ஜூன் வரை, 38 வாரங்களில் இந்திய அரசு 42 முறை, பல பகுதிகளில் முகநூலைத் தடை செய்தது.
உலகம் முழுமையும் 10 நாடுகளில் 53 முறை தடை.
அதே காலகட்டத்தில், பயனாளிகள் குறித்த விவரங்களைத் தருமாறு கேட்பதில் அமெரிக்கா முதல் இடம். 57,294 முறை. இந்திய அரசு 35,560 பேர் குறித்த விவரங்களைக் கேட்டது.
ஒட்டுமொத்தமாக, அமெரிக்கா, 61,528 கணக்குகள் குறித்த விவரங்களைப் பெற்றுள்ளது.