sஐபிஎல் இன்றைய ஆட்டம்: வெற்றி பெறுமா சென்னை?

public

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல்லில் நடைபெற்ற 11 ஆட்டங்களில் விளையாடி எட்டு போட்டிகளில் தோல்வியடைந்து முதன்முறையாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்கிற நிலையில் இன்று விளையாட இருக்கிறார்கள். ஆனால், புள்ளிப் பட்டியலில் கடைசி நிலை என்ற பரிதாப நிலையை மாற்ற முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறார்கள் சென்னை ரசிகர்கள்.

மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 114 ரன்னில் சுருண்டதும், குறிப்பாக பேட்டிங்குக்கு உகந்த சார்ஜா ஆடுகளத்தில் பவர்பிளேக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததையும் சென்னை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தொடர்ச்சியான சறுக்கலால் நிலைகுலைந்து திகைத்து போய் நிற்கும் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றி பெறுமா என்பதை இன்றைய ஆட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.

10 ஆட்டங்களில் ஏழில் வெற்றி, மூன்றில் தோல்வி என்று 14 புள்ளிகளுடன் வலுவாக உள்ள பெங்களூரு அணி இந்த ஆண்டு வெற்றி நடை போடுகிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகிய டாப்-4 வீரர்களின் பேட்டிங் திறமையும், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சும் பெங்களூரு அணிக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளன. இவர்களின் கை ஓங்கினால், பெங்களூரு அணிக்கு இனிப்பான முடிவே கிடைக்கும். ஏற்கனவே சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ள பெங்களூரு அணி கூடுதல் உற்சாகத்தில் களம் காணும் என்று தெரிகிறது.

கடந்த தோல்விகளால் வேதனை அடைந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமலும், அது வீரர்களைப் பாதிக்காத வகையிலும் பார்த்து கொள்ள வேண்டும். எஞ்சிய ஆட்டங்களிலும் எங்களுடைய பெருமைக்காவது வெற்றி பெற்று மோசமான நிலைமையை மாற்றுவோம்” என்று உறுதியளித்துள்ளார் சென்னை அணியின் கேப்டன் டோனி. இன்றைய ஆட்டத்தில் அதைப் பார்க்கலாம் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

**-ராஜ்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *