மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

இன்று பாதிப்பு 3,536: சிகிச்சையில் 38,093 பேர்!

இன்று பாதிப்பு  3,536: சிகிச்சையில் 38,093 பேர்!

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 4 ஆயிரத்துக்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று புதிதாக, 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 6,90,936ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 192 மருத்துவமனைகளில் இதுவரை 87 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4,515 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,42,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உட்பட, இதுவரை கொரோனாவால் 10,691 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 38,093ஆக குறைந்துள்ளது. சென்னையிலும் இன்று பாதிப்பு குறைந்துள்ளது. புதிதாக 883 பேருக்கு உட்பட இதுவரை 1,90,949 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக, கோவையில் 290 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 19 அக் 2020