மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள்: புது தேதி அறிவிப்பு!

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள்: புது தேதி அறிவிப்பு!

பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நவம்பர் இறுதி வரை நீட்டித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்று பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி நவம்பர் 1ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும், நவம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒரு சில மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகளை ஏற்றும், ஐஐடி மற்றும் என்ஐடி ஆகியவற்றின் சேர்க்கை செயல்முறைகளை கருத்தில் கொண்டும் நவம்பர் 31ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நீட்டித்து கால அவகாசம் வழங்கியுள்ளது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்.

இளங்கலை முதலாமாண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் நவம்பர் 31ஆம் தேதியுடன் முடிக்கப்பட்டு டிசம்பர் 1ஆம் தேதிக்கு உள்ளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது ஏஐசிடிஇ.

முன்னதாக, 2020 21 ஆம் கல்வியாண்டிற்கான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று ஏஐசிடிஇ அனைத்து கல்வி நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 19 அக் 2020