மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

கொரோனா: அடுத்த பிப்ரவரி வரை பாதிப்பு!

கொரோனா: அடுத்த பிப்ரவரி வரை பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடரக் கூடும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் எம். வித்யாசாகர் தலைமையில் மத்திய அரசு அமைத்த அறிவியலாளர் குழு கொரோனா வைரஸின் தொற்றுப் பாதையை கணினி வரைபடம் மூலம் ஆய்வு செய்துள்ளது.

இந்தக் குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கை பற்றிய விவரங்கள் தற்பொது வெளியாகியுள்ளன. அதன்படி, “கொரோனா வைரஸ் செப்டம்பர் நடுப்பகுதியில் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பரில் உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு சரியத் தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரக் கூடும்”என்று தெரியவந்துள்ளது.

அந்தக் குழு அளித்துள்ள அறிக்கையில், “ இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 106 லட்சத்தை (10.6 மில்லியன்) தாண்ட வாய்ப்பில்லை. இதுவரை, இந்தியாவில் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 66 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நோய் பரவுவதை குறைப்பதில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு லாக் டவுன் இல்லாதிருந்தால், இறப்பு எண்ணிக்கை 25 லட்சம் வரை உயர்ந்திருக்கும். தற்போது வரை, இந்தியாவில் இந்த நோயால் 1.14 லட்சம் பேர் இறந்துள்ளனர். எவ்வாறாயினும், இதற்கு மேலும் ஊரடங்கு என்பது விரும்பத் தகாதது. அதனால் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை.

வர இருக்கும் பண்டிகை காலம் மற்றும் நெருங்கும் குளிர்காலம் ஆகியவை இந்த நோய்த்தொற்றுப் பரவலை அதிகரிக்கும். எனவே, தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும்” என்று குழு பரிந்துரைத்துள்ளது.

-வேந்தன்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 18 அக் 2020