ஐபிஎல்: வெற்றிப்பாதைக்குத் திரும்புமா ஐதராபாத்?

public

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று (அக்டோபர் 18) மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

எட்டு ஆட்டங்களில் மூன்று வெற்றி, ஐந்து தோல்வியுடன் உள்ள ஐதராபாத் அணி முந்தைய ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னை அணிகளிடம் தோல்வியடைந்தது. இனிவரும் ஒவ்வோர் ஆட்டமும் முக்கியமானது என்பதால் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது.

கேப்டன் வார்னர் (284 ரன்), பேர்ஸ்டோ (280 ரன்), மனிஷ் பாண்டே (206 ரன்), வில்லியம்சன் (152 ரன்) ஆகியோரை தான் அந்த அணி பேட்டிங்கில் மலைபோல் நம்பி இருக்கிறது. ஏற்கனவே கொல்கத்தாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஐதராபாத் அதற்கு பழிதீர்க்கவும் முனைப்பு காட்டும்.

இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடி நான்கில் வெற்றியும், நான்கில் தோல்வியும் கண்டுள்ள கொல்கத்தா அணி புதிய கேப்டன் இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்கி கடந்த ஆட்டத்தில் மும்பையிடம் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா அணி எழுச்சி பெற ரஸ்செல், மோர்கன், தினேஷ் கார்த்திக், ராணா, திரிபாதி ஆகிய அதிரடி சூரர்கள் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில் மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. வெற்றிப்பாதைக்குத் திரும்புமா ஐதராபாத் அல்லது தன் வெற்றிப்பயணத்தைத் தொடருமா கொல்கத்தா என்பது இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *