மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

புதிதாக 4,295 பேருக்குத் தொற்று: 5,005 பேர் டிஸ்சார்ஜ்!

புதிதாக 4,295 பேருக்குத் தொற்று: 5,005 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று, 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு, 6,83,486ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,005 பேர் உட்பட இதுவரை 6,32,708 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 57 பேர் உட்பட இதுவரை 10,586 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,192 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை 86 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1,132பேர் உட்பட இதுவரை 1,88,944 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 389 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 39,495 ஆக அதிகரித்துள்ளது

பிரியா

சனி, 17 அக் 2020

அடுத்ததுchevronRight icon