மந்தை நோய் தடுப்பாற்றலை இந்தியா எட்டவில்லை: ஹர்ஷ் வர்தன்

public

‘ஹெர்டு இம்யூனிட்டி’  எனப்படும் மந்தை நோய்த் தடுப்பு நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை என்றும் இதற்கு நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 60,74,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்த 12 நாட்களில் மொத்த பாதிப்பு 60 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, 12 நாட்களில், 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 0- 10 லட்சம் பாதிப்புகள் என்பது 169 நாட்களில் அடைந்ததாகவும், அதன் பிறகு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில்,  10 -20 லட்சம் பாதிப்புகள் 21 நாட்களிலும், 20-30 லட்சம் பாதிப்புகள் 16 நாட்களிலும், 30-40 லட்சம் வரை 13 நாட்களிலும்,  40-50 லட்சம் வரை 11நாட்களிலும்,  50-60 லட்சம் வரை 12 நாட்களிலும் பதிவாகியிருக்கிறது என மத்திய அரசு தரவுகள்  தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் சம்வாத் நிகழ்ச்சியில் நேற்று (செப்டம்பர் 27) உரையாடிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், விரைவில் வெளியாகவுள்ள ஐசிஎம்ஆரின் இரண்டாவது செரொ சர்வேயின் அடிப்படையில் நாம், மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பது தெரியவருகிறது. இதன்மூலம் அனைவரும் கோவிட்-19 விதிமுறைகளை, செயல்களை முறையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமின்றி இதயம், சிறுநீரகம் என மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்களைத் திரட்ட நிபுணர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர், பிளாஸ்மா  போன்ற சிகிச்சை முறைகளின் பரவலான பயன்பாடு குறித்து அரசு வழக்கமான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது  என்று தெரிவித்துள்ளார்.  

மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு கோவிட்19 பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதோடு, ஏற்கெனவே உள்ள மருத்துவ உள்கட்டமைப்பையும் புதுப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *