Kஎஸ்பிபி எனும் மாயக்குரலோன்!

public

மூன்றெழுத்து மந்திரம் தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. நம் அனைவரின் துக்கம், சந்தோஷம், கோபம், சோகம் என எல்லாவற்றிலும் நம்முடன் வாழ்ந்த ஜீவன் இன்று பாடலாய் கரைந்து போனது. நாம் அழும் போது நிறையத் தடவை நம்மை அழ விடாமல் செய்த ஜீவன், இன்று நம்மை அழவைத்துவிட்டு காற்றில் கலந்தது.

எஸ்.பி.பி என்ற தாரக மந்திரம். பட்டி, தொட்டிகளிலும் பிரபலமான குரலுக்குச் சொந்தக்காரர்.

**இயற்கை எனும் இளைய கன்னி எனத் தொடங்கி**

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே என்பதன் வழியே….

நான் தேடிவந்தவொரு கோடி நிலவு அது நீதானே நீதானே என எங்கள் உள்ளங்களை நிறைத்த அந்தக் குரல் இன்று வானம் கலந்து விட்டது.

பாலு உங்களுக்குப் பிடித்த பாடலைக் கொண்டே உங்களை அழைக்கிறோம்…நீங்கள் வந்து விடுங்கள் ஆம்.

*வண்ணம் கொண்ட வெண்ணிலவே*

*வானம் விட்டு வாராயோ*

விண்ணிலே பாதை இல்லை

*உன்னைத் தொட ஏணி இல்லை*

என்ற உங்களுக்குப் பிடித்த பாடலைக் கொண்டே உங்களை அழைக்கிறோம்…நீங்கள் வந்து விடுங்கள் என்பதே சாமானியர்கள் தொடங்கி அனைவரது எதிர்பார்ப்பாகவும் மாறிப்போய்விட்டது.

**எழுதிக்கொடுத்த பாடல்களை வெறுமனே பாடிவிட்டு போகாமல் அதற்குள் பல வண்ணங்களையும் பாவங்களையும் வடித்து அந்த எண்ணங்களை நமது நெஞ்சில் நிறைத்த மாபெரும் கலைஞன் எஸ்பிபி.**

ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, அந்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை அவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர் எஸ் பி பி.

**விவிதபாரதி காலம் தொடங்கி இசையில் முத்துக் குளித்தவர். இன்றைய இளைஞர்களின் இசைக்கும் வடிவமாக மிளிர்பவர்.**

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் பல்வேறு விருதுக்குச் சொந்தக்காரர். ஏறக்குறைய ஐம்பதாண்டு இசைப்பயணத்தில் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள். பாடகராக மட்டுமல்லாமல், நடிகர், இசையமைப்பாளர், **கமலின் தெலுங்கு படங்களின் பெரும்பான்மை படங்களுக்குப் பின்னணிக் குரல் அளிப்பது என பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர்.**

இவர் குரலில் நாம் கேட்கும் அனைத்துப் பாடல்களும் நமக்குள் ஏதோ ஒரு உணர்வலையை நிகழ்த்திவிடும். சோகத்தில் ஆரம்பித்து, ஒரு உயிர் பிறக்கும் மகிழ்ச்சியைச் சொல்லும் குரல் பாவம் இவருடையது. டாவின்சியின் மோனலிசா ஓவியத்தைப் போன்ற இருவேறு பாவங்களும் ஒருமித்த அதிசயம்.

**எண்பதுகளின் இளையராஜா, எஸ்பிபி ஜோடியின் பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை எனக்கூறலாம். ** இந்த வெற்றிக் கூட்டணி நமது காதலில் வாழ்ந்தது. நமது தோல்வியைத் தோள் சுமந்தது. நமது கண்ணீருக்கு இசையால், குரலால் அருமருந்திட்டது.

இவரை ஒரு ஆளுமைமிக்க இசையமைப்பாளராக உலகிற்கு அறிய வைத்த பெருமையை “சிகரம்” படம் தட்டிக்கொண்டது. படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. **இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு “வண்ணம் கொண்ட வெண்ணிலவே”, “அகரம் இப்போ சிகரம் ஆச்சு”, “உன்னைக்கண்ட பின்புதான்” என்று வரிசைகட்டி நிற்கும்.**

எத்தனை திறமைகள் தன்னிடம் இருந்தும் மனிதநேயத்தைத் தனது ஆடையாகப் பூண்டிருந்த மாமனிதன். மற்றவரைப் பாராட்டுவதில், எதிரில் இருப்பவரின் திறமைகளை இனம் கண்டு புகழாரம் சூட்டுவதில் கஞ்சத்தனமில்லாத மனிதர் என்பது இவரின் வாழ்க்கை பயணத்தின் வெற்றிப்பாதைக்கான அடிச்சுவடி என்றால் மிகையாகாது.

மகிழ்ச்சியான தருணங்களில் கேட்டால் இன்பத்தை இரட்டிப்பாக்கவும், சோகமானத் தருணங்களில் கேட்டால் நம்மை சேர்ந்து அணைத்து ஆறுதலும் தரும் அந்தக்குரலின் மூச்சு நின்றுதான் போனது.

**பேசாமல் நானே செத்திருக்கலாம் எனும் எண்ணம் எல்லா மரணத்தின் போதும் தோன்றுவதில்லை. அத்தகைய ஒரு உணர்வை நம்முள் விதைத்துவிட்டு தனது காலத்தை அறுவடை செய்து கொண்டது எஸ்பிபி எனும் சகாப்தம்.**

இசை தாயின் தவப்புதல்வனே காற்றில் கரைந்தாயோ… இனி காற்றும் இசைபாடும்….கவிக்குயிலே…இசைத்தாயின் மடியில் இளைப்பாறு. உன் குரல் எங்கள் மனதின் ஒரு ஓரத்தில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் எஸ்பிபிசார்! இசை உள்ளவரை நீங்களும் வாழ்வீர்கள்.

**எங்கும் எதிலும் எஸ்பிபி**

நீங்க எந்த சிவன் கோயில் போனாலும் **”ஹர ஹர சிவனே அருணாச்சலமே அண்ணாமலையே போற்றி”** னு ஒலிக்கும்

எத்தனை புத்தாண்டு வந்தாலும் **”Hi everybody wish u a Happy New year nu arambichu இளமை இதோ இதோ”** னு ஒலிக்கும்

வாழ்க்கைய 8 ஆல வகுக்க**”எட்டு எட்டா மனுஷன் வாழ்வ பிரிச்சிக்கோ” **னு ஒலிக்கும்

ஒரு இசைக்கலைஞன் தன் பயணத்த இனிமையா தொடங்க **”மடைதிறந்து தாவும் நதி அலை நான்”** னு ஒலிக்கும்

நமக்கு வர நண்பன புகழ **”பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க”** னு ஒலிக்கும்

காலை உதயத்த மேலும் அழகுபடுத்த** “இது ஒரு பொன்மாலை பொழுது”** னு ஒலிக்கும்

காதலை புனிதப்படுத்த **”மண்ணில் இந்த காதலின்றி, காதல் என்னும் தீபம் ஒன்று, கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ”**னு ஒலிக்கும்

தன் வாழ்வில் அமைந்த அவளை வர்ணிக்க **”இளமை என்னும் பூங்காற்று,வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே”**னு ஒலிக்கும்

தன்னவள் உடன் நாட்கள் கழிக்க **”வளையோசை கலகல வென்று கவிதைகள் படிக்க,யாரோ யாருக்குள் இவள் யாரோ, அய்யோ நெஞ்சம் அலையுதடி”**னு ஒலிக்கும்

ஒருதலை காதலை பெருமை சேர்க்க **”காதல் என்னும் தேர்வு எழுதி காத்திருந்த மாணவன் நான்”** னு ஒலிக்கும்

வாழ்க்கையில் பல தடைகள் தாண்டி முன்னேற **”வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்”**னு ஒலிக்கும்

நண்பர்கள் ஏமாற்றும் போது **”யார் யாரோ நண்பர்கள் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று”**னு ஒலிக்கும்

காதல் தோல்விக்காக **”யம்மா யம்மா காதல் பொன்னம்மா,உன்ன நேனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே”**னு ஒலிக்கும்

தமிழுக்குப் பெருமை சேர்க்க **”என் தாய் கொடுத்த தமிழுக்கு இல்லை தட்டுப்பாடு”** னு ஒலிக்கும்

வாழ்க்கையில் தோத்துட்டோமே னு நினைக்கும் போது **”ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல”** னு ஒலிக்கும்

நாட்டோட பெருமை எடுத்துரைக்க **”தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்”** னு ஒலிக்கும்

துன்பம் மறந்து துள்ள **”எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்”** னு ஒலிக்கும்

எல்லாரும் ஒன்று னு சொல்ல **”எவன்டா மேல எவன்டா கீழ எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு”**னு ஒலிக்கும்

ஹார்மோனியம் முதல் இயந்திர இசை வரை எல்லாமே கடந்தாச்சு….

நம்ம வாழ்க்கையில வர இன்பம், துன்பம்,காதல்,மோதல், துரோகம், முயற்சி னு எல்லாத்துலயும் அவரோட குரல் ஒலிக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்…

**கட்டுரையாளர் குறிப்பு**

**உஷா பாரதி**

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாதவர்… தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தனையாளர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *