Yரிலாக்ஸ் டைம்: கிரீன் சாண்ட்விச்!

public

ஆரோக்கியமான, எளிதான உணவை ரிலாக்ஸ் டைமில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு இந்த கிரீன் சாண்ட்விச்.

**எப்படிச் செய்வது?**

கிரீன் சட்னி செய்ய: புதினா – ஒரு கைப்பிடி, பூண்டு – 4 பற்கள், பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

துருவிய கேரட், கோஸ் இரண்டும் சேர்த்து கால் கப், துருவிய பனீர் இரண்டு டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு ஆகியவற்றுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் ஊற்றிக் கலந்துகொள்ளவும். கிரீன் சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களைச், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

பிரெட்டின் இருபுறமும் சிறிதளவு வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் கிரீன் சட்னியைத் தடவவும். இதன் மீது கலந்துவைத்துள்ள காய்கறி – சாஸ் கலவையை வைத்து சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும். தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

**சிறப்பு**

காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கான சிறந்த ஆரோக்கியமான உணவு இது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *