கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் – சாபுதானா தாளி பீத்!

public

மகாராஷ்டிரா உணவுகள் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன. பிற மாநில மக்கள் இவர்களின் உணவுகளைச் சற்று கூடுதல் காரமான உணவு என்று சொன்னாலும், இவர்கள் அவற்றை மிகவும் விரும்பி உண்கின்றனர். அவற்றில் ஒன்று இந்த சாபுதானா தாளி பீத்.

**என்ன தேவை?**

ஜவ்வரிசி – ஒரு கப்

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2

பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலைப் பொடி – அரை கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஜவ்வரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பவுலில் ஜவ்வரிசியுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். ஒரு வாழையிலையில் எண்ணெய்/தண்ணீரைத் தடவி, பிசைந்த மாவை உருட்டி எடுத்து இலையில் வைத்து வட்டமாக விரல்களால் தட்டவும். நடுவில் விரலால் சின்ன துளையிட்டுக் கொள்ளவும். பிறகு சூடான தோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தட்டியதைச் சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டெடுக்கவும். வெந்துகொண்டிருக்கும்போது தாளி பீத்தைச் சுற்றிலும் அதன் நடுவிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் கிரிஸ்பியாக வரும்.

[நேற்றைய ரெசிப்பி: ஆலூ கீ சப்ஜி வித் புல்கா](https://www.minnambalam.com/public/2020/09/17/1/kitchen-,keerthana)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *