வீட்டிலேயே பணியாற்றும் நிலை இன்றும் பல பெண்களுக்குத் தொடர்கிறது. இதனால் காலை உணவைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கொள்ளு சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்துக்கு இரண்டு நாள்கள் கொள்ளு சாப்பிடலாம். ரிலாக்ஸ் டைமில் சாப்பிடக்கூடிய நல்ல சத்தான உணவு இது.
**எப்படிச் செய்வது?**
ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கொள்ளு இரண்டு டேபிள்ஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய கேரட் பாதி அளவு, குடமிளகாய் பாதி அளவு, உப்பு தேவையான அளவு, நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று என்று அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் வினிகர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.
**குறிப்பு**
முளைகட்டிய கொள்ளை வேகவைத்தும் சேர்க்கலாம். சௌசௌ, நூக்கல், தக்காளி, வெள்ளரி, கோஸ் இவற்றுடன் கொள்ளு சேர்த்து சாப்பிடலாம்.
**சிறப்பு**
குடமிளகாயை தினசரி எடுத்துக்கொண்டால் பசியைக் குறைத்து, எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்.�,