மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா: 57 பேர் பலி!

ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா: 57 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, பரிசோதனை, இறப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது. இன்று (செப்டம்பர் 16) மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஒரே நாளில் 5,652 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 5,19,860 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 8,559 ஆக உயர்ந்துள்ளது. 5,768 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுநாள் வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 46,633 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 983 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவையில் அதிகபட்சமாக 549 பேர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

-கவிபிரியா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon