மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ரிலாக்ஸ் டைம்: கேரட் சப்ஜா ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: கேரட் சப்ஜா ஜூஸ்!

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மணிக்கணக்கில் பணியாற்றும் பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சினைகளும் உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகளும் தவிர்க்க முடியாதவை. அவர்களுக்கு இந்த கேரட் சப்ஜா ஜூஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

இரண்டு கேரட்டைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். இரண்டு டீஸ்பூன் சப்ஜா விதைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். பிறகு, மிக்ஸியில் கேரட், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் ஒன்று, தோல் சீவி நறுக்கிய இஞ்சி கால் அங்குலத்துண்டு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து அதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைச் சேர்த்துக் கலக்கவும். பின்பு அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

சப்ஜா விதைகள் குளிர்ச்சித்தன்மை கொண்டவை. வயிறு சூடாகாமல் சீராக இருக்க உதவும். அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துகள் நிறைந்தது கேரட். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்கும்.

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon