மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - கடி!

கிச்சன் கீர்த்தனா: மகாராஷ்டிர ஸ்பெஷல் - கடி!

நாம் சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல், கூட்டுன்னு எப்படி தினமும் ஒரு வகையைச் சேர்த்து சாப்பிடுகிறமோ, அதேமாதிரி மகாராஷ்டிராவில் இந்த கடியைத் தங்கள் உணவில் அவ்வப்போது சேர்த்துப்பாங்க. சூடான சாதத்துடன் இந்த கடியைச் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். சீக்கிரமா ஜீரணமும் ஆகும். உடம்புக்கு ரொம்பவும் நல்லது.

என்ன தேவை?

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

புளித்த தயிர் - 3 கப்

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தயிரை கட்டி இல்லாமல் கடைந்துகொள்ளவும். இத்துடன் கடலை மாவைச் சேர்த்துக் கடையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பச்சை மிளகாய், கடைந்த கடலை மாவு கலவை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இதை சாதம் மற்றும் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: மகாராஷ்டிர ஸ்பெஷல் - சக்கர் பாரே!

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது