மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

சண்டே ஸ்பெஷல்: மசாலாப் பொருட்களின் அரசன்!

சண்டே ஸ்பெஷல்: மசாலாப் பொருட்களின் அரசன்!

இந்தியாவின் பொருளாதாரத்தோடு, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விளைபொருளாக இருந்திருக்கும் மிளகு, ‘மசாலாப் பொருட்களின் அரசன்’ என்று குறிப்பிடுகிறது நம் வரலாறு.

காய்களைச் சமைக்கும்போது, மிளகையும் சேர்த்துச் சமைப்பதுதான் நமது மரபாக இருந்திருக்கிறது. மிளகின் தாக்கம் இல்லாத உணவுகளே நம் உணவுப்பட்டியலில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தது. ஆனால், இன்று நாம் மிளகுப் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துவிட்டோம்.

புற்றுநோய், பக்கவாதத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் மிளகு பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை மிளகுக்கு உண்டு என்று அறிந்த ரோமானியர்கள் உணவுப்பொருள்கள் கெடாமல் பாதுகாக்க மிளகைப் பயன்படுத்தியுள்ளனர். நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பகப் பகுதிகளில் வரக்கூடிய புற்றுநோயின் தீவிரத்தை மிளகு குறைக்கிறது என்றும் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட மிளகை இந்த கொரோனா பரவல் காலத்தில் நாமும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

* சளி, இருமல் ஏற்படும்போது நான்கு மிளகைப் பொடித்து, சுத்தமான தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நோய்கள் தீரும்.

* பாலில் மிளகுத்தூள், மஞ்சள்தூள் கலந்து குடித்தால் கப நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,

* சிறு குழந்தைகளுக்கு மிளகு சேர்ந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுத்துவந்தால் ‘ஆன்டிபயாட்டிக்’ எதுவும் தேவையில்லை.

* மூச்சுத் திணறல் உள்ளவர்கள் மிளகுடன் வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டால் சுவாசம் சீராகும்.

* பழங்களிலும் சூப்பிலும் மிளகுத்தூளைத் தூவிச் சாப்பிட்டால் சுவையோடு சேர்த்து, உடல்நலத்தையும் கொடுக்கும்.

* குளிர்ச்சித் தன்மையுடைய காய்களைச் சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிளகு சேர்த்தால் சளி, இருமல் ஏற்படாது. நோய்த் தொற்று பரவாது.

உணவுகளில் போடப்படும் மிளகுகளை எடுத்து வீசியெறிவதை நிறுத்திவிட்டு, காரத்தை ரசித்துச் சாப்பிடப் பழகுவோம். அடுத்த தலைமுறையையும் பழக்குவோம். இனி சமையலில் மிளகை அதிகம் பயன்படுத்துவோம்.

நேற்றைய ரெசிப்பி: முட்டை - 85

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது