மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம்: நிர்மலா சீதாராமன்

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம்: நிர்மலா சீதாராமன்

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம் என நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, “ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

அவசர கால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக இந்தக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அந்தத் திட்டத்தின்கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால், அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். நிச்சயம் நான் கவனிக்கிறேன். கடன் கிடைக்க வழிசெய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon