மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

இன்று பாதிப்பு 5,879: 7,010 பேர் டிஸ்சார்ஜ்!

இன்று பாதிப்பு 5,879: 7,010 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது.  இந்நிலையில், வெளி பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த 57 பேர் உட்படத் தமிழகம் முழுவதும் 5,879 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு, 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று, 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,00,877 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 368 பேருக்கும், தேனியில் 327 பேருக்கும், செங்கல்பட்டில்  314 பேருக்கும், திருவள்ளூரில் 305 பேருக்கும்,   விருதுநகரில் 286 பேருக்கும், தூத்துக்குடியில் 243 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும்  தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று மட்டும் 7,010 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,966ஆக அதிகரித்துள்ளது. இன்று 99 பேர் உட்பட இதுவரை 4,034 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில், 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-கவிபிரியா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon