மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

காதலுக்கு குறுக்கே ஒரு கோடு : அப்டேட் குமாரு

காதலுக்கு குறுக்கே ஒரு கோடு : அப்டேட் குமாரு

“டேய் குமாரு, பாய் வீட்டுல பிரியாணி கொண்டாந்து குடுத்தா இதா இதுல வாங்கி வையி, தாம்பாளத் தட்டுல நேத்து பூசை பண்ண கண்ணாடி வளையல் எடுத்து வெச்சிருக்கேன். பாயூட்டம்மாவுக்கு ரோஸ் கலர் பிடிக்கும். அதுல நால எடுத்துக் குடுத்துரு என்ன? நான் மிஷின் வரைக்கும் போய் மாவு திரிச்சுட்டு வந்துர்றேன்”, வாளியை எடுத்துக்கொண்டு கிளம்பிய அம்மாவை டாடா சொல்லி வழியனுப்பினான் குமார். வாசலை எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருக்க, ஒரு வழியாக பாய் 12 மணிக்கு மேல் தலை காட்டினார். கையில் கூடை, முகம் கொள்ளாத சிரிப்பு. கூடையை வாங்கி உள்ளே வைத்த குமார், “ஈத் வாழ்த்துகள் பாய்”, என்றான் சிரிப்புடன். “நீங்க வந்தா அம்மா இதைக் குடுக்க சொன்னாங்க”, என்று வளையல்களை எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்ட பாய், “நல்லது குமாரு, யாரோ ஒரு பையன் நம்ம ஜமீலாவ ஒரு மாசமா பஸ் ஸ்டாப் வரை தினமும் ஃபாலோ பண்றானாம். யார்னு விசாரிச்சதுல உன் தோஸ்த்துன்னு சொன்னாங்க. கொஞ்சம் சொல்லி வையேன். அம்மாகிட்ட நேத்தே சொன்னேன். குமாருகிட்ட நீங்களே சொல்லிருங்க அப்டின்னுட்டாங்க”, என்றார்.

அரசல் புரசலாக தெரியும் தான் என்றாலும், “நீங்க என்ன பாய் சொல்றீங்க? நம்ம அஷோக் தான? உங்களுக்கு அவுங்க அப்பாவைத் தான் நல்லா தெரியுமே? சிஏஏ போராட்டத்துக்குக் கூட என் கூட வந்தானே அவன்? நல்ல பையன், படிச்சிருக்கான், வேலைக்குப் போறான்”, என்று அமர்த்தலாகச் சொன்னான். “ஆமாப்பா. அன்பு பாசம் எல்லாம் பிரியாணி, சிஏஏ, வளையலோட இருக்கணும். சம்பந்தம் பண்ணனும் அப்டின்னா இனி வர்ற காலத்துல முடியாது தம்பி. ஜமாத் எல்லாம் முன்ன மாதிரி இல்ல. போற காலத்துல எனக்கு கபர் கிடைக்கணும். அதைவிட என் பொண்ணுக்கு நிம்மதி வேணும். இப்போ இங்கே எல்லாம் மாறிப்போச்சு. உங்களுக்கும் எங்களுக்கும் இடையே கடக்கக் கூடாத கோடு இருக்கு தம்பி. நடக்காதுன்னு தெளிவா சொல்லிடுங்க”, விடுவிடுவென நடந்து போனார் பாய். ‘ஹ்ம்ம்ம்…ஓண்ணு மண்ணா இருந்த ஊர இப்புடி உலையில போட்டுட்டீங்களேடா’, என்று புலம்பியபடி கதவை சாத்தினான் குமார்.

வாங்க அப்டேட்டுக்கு போவோம்.

டீ

மனதுக்குள் ஒரு சின்ன சர்வே செய்து பார்த்தேன். என்னுடன் படித்தவர்கள்,சுற்றம், நட்பு, உறவில் சங்கி மனநிலையில் இருப்போர் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். சமூக நீதி பேசுவோர் ஒப்பீட்டளவில் குறைந்த வசதியுடன் இருக்கிறார்கள்.

ட்விட்டர் கிட்

எத்தின பிச்சைகாரர்கள் அதிகம் ஆயிருக்காங்கன்னு யாரவது சர்வே எடுத்தா, மறக்காம என்னையும் சேர்த்து கொள்ளவும்.

கோழியின் கிறுக்கல்

என்னவோ மாஸ்க் போடாம விட்டால் தாவாங்கட்டை கழண்டு விழுந்திடுங்கற மாதிரியே, எல்லோரும் ஏன்யா தாடையிலே மாஸ்க் போட்டுட்டு சுத்துறீங்க!?

மாஸ்டர் பீஸ்

சிலருக்கு நாம கொடுக்கும் அதிகபட்ச மரியாதை அவங்க பக்கம் போகாமலிருப்பதே!!!

டான் அஷோக்

யாரை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது? பாஜகவை ஆதரிக்கும் BC/MBC/SC/ST ஆட்களை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. கசாப்புக்கடைக்காரனின் தோளில் கைபோட்டுக்கொண்டு நம்மைப் பார்த்துக் கேலிசெய்யும் ஆடுகள் அவர்கள். #TNRejectsNEP #NEPisBrahmanism

தர்ம அடி தர்மலிங்கம்

மூட்டை சுமப்பவரின் முதுகில் தெரிகிறது 'குடும்ப'த்தின் பாரம்!

கடைநிலை ஊழியன்

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் புகார் செய்யலாம்- நிர்மலா சீதாராமன் # வாங்குன கடன திரும்ப கேட்டாலும் புகார் செய்யலாமா ??

ஜோக்கர்

"நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்"ன்னு ஆசைப்பட்டு, "நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்ச மாதிரி" வாழ்ந்திட்டு இருக்குறது தான் வாழ்க்கையின் டிசைன்..!!! #யதார்த்தம்

எஸ்கேபி கருணா

எத்தனை நூறு பிரியாணி ஹோட்டல்கள் வந்தாலும், பண்டிகை அன்று வீட்டுக்கு வரும் பாய் வீட்டு பிரியாணிக்கு ஈடு ஆகாது. #verified #DoubleChecked

இதயவன்

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவுல அமெரிக்கா முதல் இடம் ன்னு பெருமை பட்டிங்களே,முதல் இடத்தில் உட்கார வைச்சி அழகு பார்த்த சீனாவுக்கு செய்யுற நன்றிகடன் இது தானா?!!!

ஆட்லின்

சமைத்து கொடுக்க வேண்டாம், உதவிக்கு வரட்டுமா? என்று கேட்டாலே போதும்... அன்றைய சமையல் மற்ற நாட்களை விட கூடுதல் சுவையாக இருக்கும்..!

-லாக் ஆஃப்

சனி, 1 ஆக 2020