மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

ரிலாக்ஸ் டைம்: ஹெர்பல் டீ!

ரிலாக்ஸ் டைம்: ஹெர்பல் டீ!

மாறிவரும் சூழலுக்கேற்ப நோய்களின் தாக்கமும் அதிகரிப்பதுடன், அதைத் தடுக்கும் மருந்துகளின் பக்க விளைவும் அதிகமாகிறது. இந்த நிலையில், நாம் இயற்கை உணவுகளோடு வாழ பழகிக்கொள்வதே சிறந்ததாகும். ரிலாக்ஸ் டைமில் சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று நினைப்பவர்கள் இந்த ஹெர்பல் டீ அருந்தலாம். இந்த ஹெர்பல் டீயில் பல சத்துகள் அடங்கியுள்ளன.

எப்படிச் செய்வது?

கொதிக்கும் நீரில் சுத்தம் செய்த ஒரு கைப்பிடி அளவு புதினா, தட்டிய ஏலக்காய் ஒன்று, சுக்குத்தூள் கால் டீஸ்பூன் சேர்த்துக் கலக்கவும். இது கொதித்து நிறம் மாறி மணம் வந்ததும் எலுமிச்சைச்சாறு சில துளிகள், வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு வடிகட்டி இளம் சூடாகப் பருகவும்.

சிறப்பு

புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். வைட்டமின் ஏ, சி நிறைந்தது. பசியைத் தூண்டும்; ஜீரணத்தை அதிகரிக்கும். சருமம் மிளிர உதவும். ஏலக்காய் கபத்தை நீக்கும். சுக்கு ஒரு அருமருந்தாகும். மேலும் இதனுடன் வெல்லம், எலுமிச்சைச்சாறு போன்ற பொருள்களும் சேர்வதால் இரும்பு, கால்சியம் நிறைந்து காணப்படும். இதை காலை, மாலை ரிலாக்ஸ் டைமில் குடித்துவர ஆரோக்கியம் மேம்படுவதை உணர முடியும்.

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon