மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது?

நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது?

நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த சூழலில் தர்மபுரி மாவட்டம் சின்னமானசாவடியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் கலையரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று (ஜூலை 30) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களில் அதிக அளவு ஆக்கிரமிப்பு நடப்பதாகத் தினசரி செய்தித் தாள்களில் காண முடிவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், ஆக்கிரமிப்புகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏன், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக் கூடாது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இயற்கை வளங்களை விலைகொடுத்து வளர்ச்சியைப் பெறக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை இவ்வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்தனர். மேலும் ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், மழைநீர் கடலில் கலப்பதைத் தடுப்பது தொடர்பாகவும் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020