மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

சா. கந்தசாமி: மண்ணின் மைந்தனுக்கு மயிலாடுதுறை அஞ்சலி!

சா. கந்தசாமி: மண்ணின் மைந்தனுக்கு மயிலாடுதுறை அஞ்சலி!

புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு உறுப்பினரும், சாகித்ய விருது பெற்றவருமான சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (ஜூலை 31) காலமானார்.

அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம், இன்றைய மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் பிறந்த எழுத்தாளர் சா. கந்தசாமியின் மறைவுக்கு ஊரடங்கின் மத்தியிலும் மயிலாடுதுறை மக்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவர் பவுல்ராஜ், அறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சாலைகளில் வந்து சென்ற மக்களும், ‘சாகித்ய அகாடமி விருது வாங்கின இவரு நம்மூர்க்காரரா?” என்ற ஆச்சரியத்தோடு சா. கந்தசாமிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

“பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா.கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக எழுத்தைப் பயன்படுத்தினார். தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும் பல்வேறு மாநில மொழி படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர்” என்றனர் அஞ்சலி செலுத்திய பிரமுகர்கள்.

ஓர் எழுத்தாளருக்கு அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக வீதிக்கு வந்த மயிலாடுதுறை மக்கள் மகத்தானவர்கள்!

-வேந்தன்

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020