மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

புதிதாக 5,881 பேருக்கு கொரோனா: 97 பேர் பலி!

புதிதாக 5,881 பேருக்கு கொரோனா: 97 பேர் பலி!

தமிழகத்தில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிற நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 31 பேர் உட்பட மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5,881 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்த மதிப்பு 2 லட்சத்து 45 ஆயிரத்து 859ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,778 பேர் உட்பட ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த இரு நாட்களாக ஒரு நாள் உயிரிழப்பு 90 ஐ கடந்து வரும் நிலையில், இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர், அரசு மருத்துவமனைகளில் 68 பேர் என மொத்தம் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இன்று வரை மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 57,968 ஆக உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று பாதிப்பு குறைந்து 1013 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,794 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று (ஜூலை 31) காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357 பேருக்கும், செங்கல்பட்டில் 334 பேருக்கும், கோவையில் 169 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020