மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

ஆன்லைன் சூதாட்டம், கோலி, தமன்னாவை கைது செய்ய வழக்கு!

ஆன்லைன் சூதாட்டம், கோலி, தமன்னாவை கைது செய்ய வழக்கு!

ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம், வாகனம் வாங்கலாம் என்று வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடித் தோற்றதால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் போழுதுப்போக்குக்காக விளையாடும் இளைஞர்கள், பிறகு அதிலேயே மூழ்கி அடிமையாகிவிடுகின்றனர். விராட் கோலி, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்து இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு வட்டிக்கு பணம் வாங்கி அதனை இழந்த இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்” என்று கூறினார். கல்லூர் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ப்ளூவேல் விளையாட்டு மாணவர்களை தற்கொலைக்கு துண்டுகிறது என தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனைவிட அதிக ஆபத்து கொண்டது இந்த ஆன்லைன் சூதாட்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்கி, அதனை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். ‘

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டுமென நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் சூரியபிரகாசம் இன்று (ஜூலை 31) முறையிட்டார். எனினும், ஆகஸ்ட் 4ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

எழில்

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020