மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

மாஸ்க் அணியாதவர்கள்: சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்!

மாஸ்க் அணியாதவர்கள்: சேலத்தில்  ரூ.1 கோடி அபராதம் வசூல்!

சேலத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ. 1 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகச் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாகச் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை வரையிலான 106 நாட்களில் சேலம் சூரமங்கலம் மண்டலம், கொண்டலாம்பட்டி மண்டலம், அஸ்தம்பட்டி மண்டலம் அம்மாபேட்டை மண்டலம் ஆகிய நான்கு மண்டலங்களில் முககவசம் அணியாமல் வந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 43 பேரிடமிருந்து, 1 கோடியே 22 ஆயிரத்து 165 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ சேலம் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் பொதுவெளிகளில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தொற்று நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-சிவசு

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon